Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது, அவர்களது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் கூடாது: உயர்நீதிமன்றம்

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக உள்ள 254 பேரின் கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என தமிழக கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014, 2015 ஆண்டுகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 152 பேர் உரிய கல்வி தகுதியை பெற்றிருக்கவில்லை என்றும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இதற்கிடையே அறக்கட்டளைகளை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி 152 உதவி பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியிருந்தார். இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட 254 உதவி பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராயவும், கல்வி சான்றிதழ்களை பெற்று சரிபார்க்கும் படி கல்லூரி கல்வி  இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சான்றிதழ் சரிபார்க்கும் பணிகளை முடித்து நவம்பர் 14-ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டு வழக்கு விசரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தகுதியற்ற ஆசிரியர்களை பணியமர்த்தினால், மாணவர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்த நீதிபதிகள் கல்லூரி ஆசிரியர்களின் கல்வித்தகுதி விஷயத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது என நீதிபதி கூறியுள்ளார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive