கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது.
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது.
👉பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும்,
👉பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும்,
👉பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும்
மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் அக்டோபர் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.
இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
👇👇👇👇👇👇👇👇
https://chennaiiit.kvs.ac.in/sites/default/files/Balavatika.pdf
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...