தமிழகத்தில் உள்ள கட்டட அமைப்பியல் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தில், தேசிய கட்டட அமைப்பியல் கவுன்சிலின் அங்கீகாரத்தில் செயல்படுகின்றன.கவுன்சிலிங்இந்த கல்லுாரிகளில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பி.ஆர்க்., படிப்பில் சேர, தமிழக உயர்கல்வித் துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்குக்கு, ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, 2,491 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1,610 பேர் 'நாட்டா' என்ற தேசிய அளவிலான கட்டட அமைப்பியல் சேர்க்கை நுழைவு தேர்விலும்; 630 பேர் ஜே.இ.இ., தேர்விலும்; 251 பேர் இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்த மாணவர்களுக்கு, 44 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. இதற்கான, 'கட் ஆப்' மதிப்பெண்கள் அடங்கிய தர வரிசைப் பட்டியல், நாளை வெளியிடப்படும் என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் 6, 7ம் தேதிகளில், தர வரிசை பட்டியல் தொடர்பான குறைகள், புகார்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வரும் 8ம் தேதி, 'ஆன்லைன்' வழி கவுன்சிலிங் துவங்குகிறது. முதற்கட்டமாக, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
ஒதுக்கீடு ஆணைவரும் 9, 10ம் தேதி பொதுவான ஒதுக்கீட்டில், ஆன்லைன் விருப்ப பதிவு துவங்க உள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, அக்.,11ல் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.ஒதுக்கீட்டை ஏற்று கொள்ளும் மாணவர்கள் வரும் 12ம் தேதிக்குள் தங்கள் சேர்க்கையை, கல்லுாரிகளில் உறுதி செய்ய வேண்டும். வரும் 21ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். வரும் 22ம் தேதி அருந்ததியருக்கான பிரிவில் உள்ள காலியிடங்கள், ஆதி திராவிடர் பிரிவினருக்கு மாற்றி ஒதுக்கப்படும் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...