பல்வேறு கல்லூரிகளில் தேர்வு 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பிறகுதான், தவறுதலாக கடந்த ஆண்டு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துக் கல்லூரிகளிலும் வினாத்தாளை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டது.
தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், வினாத்தாள் கொடுத்த சில நிமிடங்களில் திரும்ப வாங்கப்பட்டதால் அதிர்ச்சியுடன் காத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் பிற்பகலில் வந்து தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்பட்டு, புதிய வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மீண்டும் தேர்வு தொடங்கி நடைபெற்றுள்ளது.
அதாவது இ-டெலிவரி முறையில்தான் கல்லூரிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. மின்னஞ்சல் வழியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதும், அந்தந்த கல்லூரிகள் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள் அனுப்பிய பிறகுதான், அது கடந்த ஆண்டுடைய வினாத்தாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தேர்வுகள் தொடங்கிவிட்டதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...