இந்தியாவில் முதன்முறையாக சென்னை உட்பட 13 நகரங்களில் அதிவேக 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது, 4ஜி சேவையை விட 100 மடங்கு அதிவேகமாக இயங்கும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணைய சேவைகளின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்துக்கு பிறகு பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் வீடியோ கால் மூலம் மீட்டிங் மற்றும் வகுப்புகளை எடுத்து வருகின்றன. அரசு துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களின் நிர்வாக ரீதியாக பணிகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய உலகமே இணைய சேவையை நம்பிதான் உள்ளது. இதனால், தற்போது 4ஜி சேவையை விட 100 மடங்கு அதிவிரைவாகவும், தடையின்றி சேவையை பெறவும் 5ஜி அலைவரிசை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டது.
அதன்படி, ஐந்தாம் தலைமுறை எனப்படும் 5ஜி அலைவரிசைக்காக ஏலத்துக்கு கடந்த ஜூன் மாதம் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 26ம் தேதி 5ஜி சேவை ஏலம் தொடங்கியது. ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ (அம்பானி குழுமம்), வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம்5 ஜி அலைக்கற்றை ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 6வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, நாட்டில் 5ஜி சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது, 5ஜி தொழில்நுட்பத்தின் திறனை காட்ட, நாட்டின் மூன்று முக்கிய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் தலா ஒரு பயன்பாட்டை பிரதமர் மோடி முன் செய்து காட்டினர். 5ஜி சேவை நாட்டின் சென்னை உட்பட 13 முக்கிய நகரங்களில் மட்டும் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் படிப்படியாக 5ஜி சேவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொழில்நுட்பத்திற்காக வெளிநாடுகளைச் சார்ந்திருந்த நிலையில், 5ஜி மூலம் இந்தியா சரித்திரம் படைத்துள்ளது. தனது அரசாங்கத்தின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவு, தொலைநோக்கு சாதனங்களின் விலை, டிஜிட்டல் இணைப்பு, தரவு செலவு மற்றும் டிஜிட்டல்-முதல் அணுகுமுறை ஆகிய 4 தூண்களில் நிறுவப்பட்டது. இந்த அணுகுமுறை இந்தியாவில் மொபைல் உற்பத்தி அலகுகள் 2014ல் இரண்டில் இருந்து இப்போது 200 ஆக அதிகரித்து, கைபேசிகளின் விலையைக் குறைத்துள்ளது.
இந்தியா இப்போது உலகின் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களைக் கொண்டுள்ளது. 2014ல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணங்கள், ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆக குறைந்துள்ளன. மாதத்திற்கு சராசரியாக 14 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தினால், டேட்டா செலவு ரூ.4,200ல் இருந்து ரூ.125-150 ஆக குறைந்துள்ளது. பூஜ்ஜிய ஏற்றுமதியில் இருந்து, நாடு இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போன்களை அனுப்புகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் உண்மையில் இப்போது ஜனநாயகமயமாகிவிட்டது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். இருந்து இப்போது 200 ஆக அதிகரித்து, கைபேசிகளின் விலையைக் குறைத்துள்ளது.
இந்தியா இப்போது உலகின் மிகக் குறைந்த டேட்டா கட்டணங்களைக் கொண்டுள்ளது. 2014ல் 1 ஜிபி டேட்டாவுக்கு ரூ.300 ஆக இருந்த கட்டணங்கள், ஒரு ஜிபிக்கு ரூ.10 ஆக குறைந்துள்ளன. மாதத்திற்கு சராசரியாக 14 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தினால், டேட்டா செலவு ரூ.4,200ல் இருந்து ரூ.125-150 ஆக குறைந்துள்ளது. பூஜ்ஜிய ஏற்றுமதியில் இருந்து, நாடு இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போன்களை அனுப்புகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையும் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பம் உண்மையில் இப்போது ஜனநாயகமயமாகிவிட்டது. 5ஜி தொழில்நுட்பம் மூலம் புதிய வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...