CPS ரத்து , இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல் , அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3 ல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று ( 16.10.2022 ) திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது . கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மு.மணிமேகலை தலைமை வகித்தார்.
துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் , STFI பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு நன்றி கூறினார் . கூட்டப் பொருள்களின் மீதான மாநில நிர்வாகிகள் கூட்ட முடிவுகளை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பேசினார்.
கூட்ட முடிவில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும் , ஒன்றிய அரசு அறிவித்துள்ளவாறு 01.07.2022 முதல் 4 % அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் , ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை மீண்டும் வழங்கப்பட வேண்டும் , பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் ஆசிரியர்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் , தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் , கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ள உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு கல்வித்துறை உடன் ஒப்புதல் வழங்கி ஊதியம் வழங்கிட வேண்டும் , ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் , நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் முன் பருவ பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 3 ல் மாநிலம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது . கூட்டத்தில் மாநிலம் முழுதுமிருந்து மாநில நிர்வாகிகள் , மாவட்டச் செயலாளர்கள் , மாநில செயற்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...