திருக்குறள் :
பால்: அறத்துப்பால்
அதிகாரம்/Chapter: நீத்தார் பெருமை / The Greatness of Ascetics
குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
விளக்கம்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
பழமொழி :
He that can stay obtains.
பொறுத்தார் பூமி ஆள்வார்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே என்றாலும் மிக அக்கறையுடன் செய்வேன்.
2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.
பொன்மொழி :
உன்னை பேசும் உலக வாயை அடைக்க சொல் தேவை இல்லை உன் உன்னத செயல் தான் வேண்டும்.
பொது அறிவு :
1.நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
1986 .
2.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்?
செவ்வாய் கிரகத்தில்.
English words & meanings :
Me-li-to-lo-gy - the study of bees. Noun. The word Melitology comes from the Greek word Melitta means "bee". தேனீக்கள் குறித்த படிப்பு
ஆரோக்ய வாழ்வு :
பண்டிகை முடிந்த மறுநாள், எலுமிச்சை மற்றும் இஞ்சி சாற்றினை ஒன்றாக கலந்து, அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடித்தால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்பட்டு, உடலும், மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
NMMS Q :
தனி வட்டி காண உதவும் சூத்திரம்: _______________
(p x n x r)÷ 100 ; p = அசல்; n = காலம்; r = வட்டிவீதம்
நீதிக்கதை
ஏழ்மையிலும் நேர்மை
ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யாததால், அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்று தங்களின் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர், இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்! என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருக்க வேண்டும் என்றார்.
மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான்.
பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர், ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள். மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
நீதி :
பொறுமை, நேர்மை இரண்டும் இருந்தால் எதிலும் நிச்சயம் வெற்றி பெறலாம்.
இன்றைய செய்திகள்
28.10.22
* ஆன்லைனில் விண்ணப்பிப்பது நிறைவு: உதவி மருத்துவர் பணிக்கு நவம்பரில் எழுத்து தேர்வு.
* தேசிய ஒற்றுமை தினமான அக்.31-ம் தேதி மாணவர்கள் பங்கேற்புடன் மாரத்தான்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ, யுஜிசி அறிவுறுத்தல்.
* தமிழகத்தில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 2.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.9.54 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
* போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் நேற்று ஒரு நாளில் 2,500 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல்.
* உக்ரைனில் போர் தீவிரம் அடைவதால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் - இந்திய தூதரகம் அவசர உத்தரவு.
* காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் பாராட்டு.
* சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நகரை சுற்றிய பல இடங்களில் தீவிர பொது முடக்கத்தை சீனா அறிவித்துள்ளது.
* டி20 உலகக்கோப்பை:
சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.
* இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம்: பிசிசிஐ அறிவிப்பு.
* புரோ கபடி: டெல்லியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி.
Today's Headlines
* Online Application Completion: Written Test in November for Asst.
* Marathon with student participation on National Unity Day Oct 31: AICTE, UGC instructions to colleges.
* The Chennai Meteorological Department has informed us that widespread heavy rains are likely to occur in Tamil Nadu on 29th and 30th.
* In Tamil Nadu, 2.80 lakh people have traveled in special buses run on the occasion of Diwali. According to the Tamil Nadu Transport Department, a revenue of Rs 9.54 crore has been obtained through this.
* Traffic Violation: 2,500 people were fined Rs 15 lakh in one day yesterday in Chennai.
* Indians to evacuate as the war intensifies in Ukraine - Indian Embassy Urgent Order
* The Prime Minister of New Zealand hailed the role scientists play in monitoring the effects of climate change as incredibly important to our present and our future.
* China has announced a strict lockdown in many places around the city as the spread of Corona has increased again in the Chinese city of Wuhan.
* T20 World Cup:
India beat the Netherlands by 56 runs in the Super 12 round match.
* Women's team to be paid at par with Indian men's cricket team: BCCI announcement
* Pro Kabaddi: Bengal Warriors beat Delhi
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...