Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் 2,760 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 1990-91ம் ஆண்டு மற்றும் 2002-2003ம் ஆண்டு முதல் 2006-2007ம் கல்வி ஆண்டு வரை 45 பள்ளிகளுக்கு 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்களும், 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். மேலும் 2011-2012ம் கல்வி ஆண்டில் 100 நகராட்சி, மாநகராட்சி, அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என 9 பாடங்களுக்கு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து 2014-2015ம் கல்வி ஆண்டிலும் இதேபோல் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும் 2018-2019ம் கல்வி ஆண்டில் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதால் அதன் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் நிலை உயர்த்தப்பட்டு அதற்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அத்துடன் 5 பள்ளிகளிலும் தலா 6 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என 30 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இப்பணியிடங்களை பணி நிரவல் மூலம் நிரப்பவும் அரசு உத்தரவிட்டது. இதுதவிர 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் 5 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 5 அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளும் உருவாக்கப்பட்டது. இவ்வாறு 100 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கு 100 தலைமை  ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டது.

அதேபோல் 2018-2019ம் கல்வி ஆண்டில் 95 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு 95 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் தரம் உயர்த்தப்பட்டன. இப்பள்ளிகளில் தலா 6 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 570 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறு 200 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,460 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 2,760 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.12.2021 வரை ஏற்கனவே வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை, பணி நீட்டிப்பு முடிவடைந்த நிலையில், அவர்களுக்கு 1.01.2022 முதல் 31.12.2022 வரை ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மாதத்துக்கான ஊதியத்தை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.





Related Posts:

1 Comments:

  1. Pay continue order G O 120 from October 2022 send me sir🙏

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!