:
திருக்குறள்பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் : 26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
பொருள்:
பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
பழமொழி :
Good to forgive,best to forget.
மன்னிப்பதை விட மறப்பது நன்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியம் செய்தாலும் சிறிதே என்றாலும் மிக அக்கறையுடன் செய்வேன்.
2. அதே போல மற்றவர் பேசும் போது மிக கவனமாக கவனிப்பேன்.
பொன்மொழி :
கடிகாரத்தை நிறுத்தலாம் காலத்தை அல்ல. காலத்தை ஆதாயப்படுத்திக் கொள்
பொது அறிவு :
1. சூரியனின் ஒளிக்கதிர்கள் தரையை வந்தடைய எத்தனை மைல்கள் பயணம் செய்கின்றன?
6,30,04,000 மைல்கள்.
2. D.D.T யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
டாக்டர் பால்முல்லர்.
English words & meanings :
Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is a infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு
ஆரோக்ய வாழ்வு :
மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.
NMMS Q :
அன்பு ஒரு தேர்வில் 500க்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில் அவர் பெற்ற மதிப்பெண்களை சதவீதத்தில் கூறுக:
விளக்கம் : அன்பு பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் = (436 / 500 ) x 100 = 87.2%
நீதிக்கதை
உண்மைக்குக் கிடைத்தப் பரிசு
ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் பணத்தாசைப் பிடித்தவர்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பினார். அப்போது அவரது மனைவி, உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க என்றாள்.
அதேப் போல் சோமன் அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் காட்டு வழியில் வந்து கொண்டிருக்கும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று, தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார். பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் தட்டுப்பட்டது. அது என்னவென்று பார்த்தார். ஒரு பையில் நிறைய பணம் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலன் மனதில் முதலில் பணத்தை தொலைத்தவரை கண்டுபிடித்து அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்து ஊருக்கு விரைந்தார்.
ஊருக்குள் சென்று அங்கு இருந்த கடை வைத்திருந்த கடைக்காரரிடம் விசாரித்தார். அவர் உடனே சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்கள் இதைக் கொண்டுப்போய்க் கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொல்லி சோமனிடம் கொடுத்தார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை.
ஆனால் கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து, நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன் என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த வேளையில் அந்த ஊர் கடைக்கார், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்தார். பூபாலன் ஒரு குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். நடந்த அனைத்தையும் கூறினான் சோமன்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்ததுதான். அதனால் சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று சொல்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம். மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
நீதி :
கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றாவிட்டால் இருப்பதும் தொலைந்துப் போகும் நிலை வரும்.
இன்றைய செய்திகள்
27.10.22
* ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் புதிய அறிவிப்பாணையை வெளியிட தமிழக பள்ளிக் கல்வி துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தில் அக்டோபர் 29-ல் தொடங்குகிறது வடகிழக்குப் பருவமழை; அக்.30-ல் கனமழைக்கு வாய்ப்பு.
* பட்டாசு விற்பனை ரூ.200 கோடியை தாண்டியது: வியாபாரிகள் தகவல்.
* கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்; தரிசு நில தொகுப்பில் பயன்பெற முன்பதிவு செய்யலாம்: விவசாயிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்.
* கரோனா காலத்தில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
* அடுத்து வரும் சில காலம் பொருளாதார ரீதியில் கடினமான காலம் - உலக நாடுகளுக்கு சவுதி எச்சரிக்கை.
* ஐசிசி டி20 தரவரிசை: மீண்டும் டாப்-10க்குள் நுழைந்த கோலி.
* உலக பேட்மிண்டன் தரவரிசை: 3 ஆண்டுகளுக்கு பின் டாப்-5 இடங்களுக்குள் மீண்டும் நுழைந்தார் பிவி சிந்து.
* சுல்தான் ஆப் ஜோகர் ஹாக்கி கோப்பை: ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்.
Today's Headlines
* The Madras High Court has ordered the Tamil Nadu School Education Department to issue a new notification so that only those who have passed the Teacher Eligibility Test can participate in the counseling for graduate teachers.
* Northeast Monsoon begins in Tamil Nadu on October 29; Chance of heavy rain on Oct 30.
* Firecracker sales cross Rs 200 crore: Traders report.
* Artist's Integrated Agricultural Development Program; Reservations can be made to benefit from fallow land package: Minister MRK to farmers Panneerselvam request.
* The US has praised India for its role in producing vaccines during the Corona period.
*The next few days will be tough economically - Saudi warns the world.
* ICC T20 Rankings: Kohli returns to top-10.
* Badminton World Rankings: PV Sindhu re-enters top-5 after 3 years.
* Sultan of Johor Hockey Cup: Team India beat Japan.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...