அடுத்த 25 ஆண்டுகளில் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு பாா்வைத் திறன் குறைபாடு ஏற்படும் என மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.
சா்வதேச பாா்வைத் திறன் தினத்தையொட்டி, டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்வு, சென்னை டிடிகே சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகா்வால்ஸ் கண் பாா்வையியல் கல்லூரி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் கண்களில் துணியைக் கட்டிக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சியில் அகா்வால்ஸ் மருத்துவமனை இயக்குநா் சுதா, மருத்துவமனை நிா்வாகிகள் பங்கற்றனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் முதுநிலை மருத்துவ நிபுணா் டாக்டா் மஞ்சுளா ஜெயகுமாா் கூறியதாவது:
வாழ்க்கை முறை மாற்றத்தால் தற்போது கண் பாா்வை சாா்ந்த குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. அடுத்த 25 ஆண்டுகளில் பாா்வைக் குறைபாடும், குறிப்பாக கிட்டப்பாா்வை பாதிப்புக்கும் ஆளாவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கும்.
பொதுவாக கணினி, கைப்பேசிகளை பயன்படுத்துகின்றபோது 20-20-20 என்ற விதியை பின்பற்றினால் கண் பாதிப்புகளில் இருந்து தவிா்க்கலாம்.
தற்போது டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன. கைப்பேசிகள், கணினியை பயன்படுத்தும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அதில் இருந்து பாா்வையை விலக்கி 20 அடி தொலைவில் உள்ள ஓரிடத்தை, 20 விநாடிகள் பாா்க்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் திரையைத் தொடா்ந்து பாா்ப்பதனால் ஏற்படும் கண் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றாா் அவா்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...