மகப்பேறு விடுப்பு ஆசிரியைகளுக்கு மாற்று ஆசிரியர் நியமிக்கும் உத்தரவு 3 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
மகப்பேறு விடுப்பு ஆசிரியைகளுக்கு மாற்று ஆசிரியர் நியமிக்கும் உத்தரவு 3 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்
சிவகங்கை:''தமிழகத்தில் மகப்பேறு விடுப்பில் செல்லும் பள்ளி ஆசிரியைக்கு பதில் மாற்று ஆசிரியரை நியமிக்கலாம் என்ற அரசின் அறிவிப்பை வரவேற்பதாக தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் அரசு அலுவலகம், பள்ளிகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டாக நீட்டிப்பு செய்துள்ளனர்.
இதில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள் மகப்பேறு விடுப்பில் சென்றால், அப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படும். இதில் பாதிப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் சார்பில் தொடர்ந்து 3 ஆண்டாக அரசிடம் வலியுறுத்தி வந்தோம்.தொடர்ந்து முதல்வர், கல்விஅமைச்சர், கமிஷனர், இயக்குனருக்கு மனு அனுப்பினோம். இக்கோரிக்கையை ஏற்று தற்போது மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியைகளுக்கு மாற்றாக மாதம் ரூ.12,000 சம்பளத்தில் தகுதியான ஆசிரியர்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே உடனடியாக நியமித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாகவும், நிரந்தர காலிபணியிடங்களிலும் முழு கல்வி தகுதியும், அனுபவமும் பெற்ற ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவையும் கல்வித்துறை பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம், என்றார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...