மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது வரையறைக்குட்பட்ட பள்ளிகளிலிருந்து , மார்ச் 2023 இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் ( பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் . அதன்பின் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கருத்துருவினை ஆய்வுசெய்து பரிசீலனை செய்து , அப்பள்ளிகளை நேரில் பார்வையிட்டு பிற்சேர்க்கை “ அ ” மற்றும் “ ஆ ” ஆகியவற்றைப் பூர்த்தி செய்து பெறப்பட்ட கருத்துருக்களை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்புதல் வேண்டும்.
மேலும் , மார்ச் 2021 - 2022 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான ஓராண்டுக்கு மட்டும் தேர்வு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் ( சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை / நிபந்தனைகளை பூர்த்தி செய்யப்பட்டிருப்பின் ) மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குநரின் ஆணை பெறவேண்டும் எனத் தெரிவிக்கலாகிறது . அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய தேர்வு மையங்கள் பற்றிய செய்தியினை மந்தணமாக வைத்துக்கொள்ளுதல் வேண்டும் . பரிந்துரையின்றி பெறப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவிற்குப் பின் பெறப்படும் கருத்துருக்கள் ஆகியவை கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...