கல்வித்துறை நிர்வாக சீரமைப்பால்
மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,)
ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் 'அப்டேட்' செய்யப்படாததால், 10
ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் சம்பளம்
பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாநிலத்தில்
முன்பிருந்த டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் தற்போது 55 டி.இ.ஓ.,, 57 டி.இ.இ.ஓ.,
(தொடக்க கல்வி), 39 தனியார் பள்ளி டி.இ.ஓ., அலுவலகங்களாக
மாற்றியமைக்கப்பட்டது. இதில் முன்பிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளின்
அமைவிடம் பிற டி.இ.ஓ.,க்கள் எல்லைக்குள் மாறியுள்ளன. இதனால் ஏற்கெனவே புதிய
அலுவலகங்கள் கிடைப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது
சம்பளம் பெறும் ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் 'அப்டேட்' ஆகாததால்
உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் இம்மாதம் சம்பளம் பெறுவதிலும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
டி.இ.ஓ.,
அலுவலகங்களுக்கு கீழ் உள்ள அனைத்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு
அந்தந்த தலைமையாசிரியரே சம்பளம் அனுமதிக்கும் (டிராயிங்) அதிகாரி. ஆனால்
உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்களே அதிகாரி. அக்.,1
முதல் சீரமைப்பிற்கு பின் பள்ளிகள் எந்த டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் வருகின்றன
என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.
மாநில அளவில்
மதுரை உட்பட பல டி.இ.ஓ.,க்களுக்கு எல்லை குழப்பங்கள் உள்ளதால் மாநில
அளவில் 80 சதவீதம் ஆசிரியர்கள் இந்தாண்டு தீபாவளி முன்பணம் கூட பெற
முடியவில்லை. தற்போது ஐ.எப்.எச்.ஆர்.எம்., சாப்ட்வேரும் சிக்கலை
ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடன் தலையிட்டு சம்பள பிரச்னையை தீர்த்து
வைக்க வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...