பள்ளிக்கு வர இயலாத, தொலைதூரங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் பள்ளி திட்டத்தை தில்லி அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது:
இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை இன்று தொடங்கியுள்ளோம். தில்லி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தில்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில் இன்று முதல் 9ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கபட்டுள்ளது.
நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுக் கொள்ளலாம்.
மெய்நிகர் பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் நேரடி வகுப்புகளை கவனிக்கவும், அதை பதிவு செய்து கொள்ளவும் முடியும். மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும். நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கும் உதவி செய்யப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...