Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC - குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III(தொகுதி-IIIஏ) பணிகளில் அடங்கிய கீழ்வரும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 636

அறிக்கை எண் 26/2022

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை)

காலியிடங்கள்: 14

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


பணி: பண்டக காப்பாளர், நிலை-II(தொழில் மற்றும் வர்த்தகத் துறை)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.


தகுதி: 10 ஆம் வகுப்பு + 12 ஆம் வகுப்பு அல்லது இணைக்கல்வித் தகுதி + இளங்கலை பட்ட என்ற முறையில் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மற்றும் முன்னுரிமை அளிக்கப்படும் கல்வித் தகுதியினை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.01.2023 


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive