ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, சிஆர் பிஎப் உட்பட துணை ராணுவ படையினர், மத்திய அரசின் ஊழி யர்களின் குழந்தைகளின் பள்ளிக்கல்வியின் தரத்தை உறுதி செய்வதற்காக ஒன் றிய அரசால் நாடு முழுவ தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிக ளில் 40 சதவீத பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியி டங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள தாக ஏற்கனவே புகார் எழுந்தது.
கொரோனா அச் சுறுத்தல், இதற்காக 2 ஆண்டுகளாக நீடித்த பொதுமுடக்கம் காரண மாக ஒட்டுமொத்தமாக 12 ஆயிரத்து 44 பணியிடங் கள் நிரப்பப்படாமல் காலி யாகவே வைக்கப்பட்டுள் ளன. இதில் தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆயிரத்து 162 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. 2வது இடத்தை மத்திய பிரதேச மாநிலம் பிடித்துள்ளது. இங்கு ஆயி ரத்து 66 காலிப்பணியி டங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நாடு முழுவதும் ஆயிரத்து 247 பள்ளிக் ளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் 49 பள்ளிகள் இயங்குகின் றன. அதிகளவில் ஆசிரி யர் பணியிடங்கள் காலி யாக இருப்பதால். மிகவும் மோசமான சூழ்நிலை நில வுகிறது. இதனால் இரண்டு பணி நேரங்களில் ஆசிரி யர்களை வேலைவாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற் பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...