இந்த முறை ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் கலை சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்காக இந்த தேர்விற்காக விண்ணப்பித்திருந்தனர். அதில் மொத்தமாக 9,68,201 மாணவர்கள் கலந்து கொண்டதாக தேசிய தேர்வு மையத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ், ஆங்கிலம் உட்பட 13 இந்திய மொழிகளில் தேர்வு நடைபெற்றது. CUET - PG தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு https://cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 66 உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேர CUET - PG தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை தேசிய தேர்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்களோ அங்கு தொடர்பு கொண்டு அட்மிஷன் வேலைகளை துவங்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கும் தேர்வான மாணவர்களின் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தேசிய தேர்வு மையம் இணையதள லின்குகளை வழங்கியுள்ளது. மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற இணையதளம் வாயிலாக சென்று அதில் முகப்பு பக்கத்தில் உள்ள cuet results 2022 என்ற சாளரம் வாயிலாக உள்நுழைந்து உங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து உங்களது தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» CUET - PG தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CUET - PG தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
இந்தியா முழுவதும் 50 தேர்வு
மையங்களில் மத்திய பல்கலைகழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை
பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான தேர்வுகள் 6 கட்டமாக நடத்தப்பட்டன. புதிய
கல்வி கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் (CUET)
என்று செல்லப்படுகிறது. பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (Common
university entrance test ) நடத்தப்பட்டு வருகிறது. மத்திய
பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்
துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டபடிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள்
இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...