மேலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்ற சட்டமும் உள்ளது. எனவே சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட அனைத்து பத்திரங்களையும் ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக இந்த பத்திரப்பதிவுக்கு துணையாக இருந்த பத்திரப்பதிவு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்? ஆவணங்களுடன் புகார் பெறப்பட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, தமிழக அரசால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதி, முறைகேட்டில் ஈடுபட்ட சார் பதிவாளரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அதற்கான அறிக்கையை பத்திரப்பதவித்துறை ஐஜி உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...