மின்கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அது தொடர்பான கருத்து கெட்டப்பு கூட்டமானது நடைபெற்று கொண்டிருந்தது. தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும் ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் மின்கட்டண உயர்வானது அமல்படுத்தப்படுகிறது. 200 யூனிட்டுக்கு மேல் இரண்டு மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு மதம் ஒன்றிற்கு ரூ.27.50 உயர்த்தப்படுவதாகவும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 உயர்த்தப்படுவதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு 400 யூனிட் வரை உபயோகபடுத்தும் 18.82 லட்சம் பயனாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.147.50 உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கருத்து கேட்பு கூட்டம் ஆனது நடைபெறுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த சூழல் தான் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதி தற்போது வழங்கப்பட்ட நிலையில் மின்கட்டண உயர்வு ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...