இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அப்படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கும் என்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் நான்கு ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ட்ற்ற்ல்ள்://ஹக்ம்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கடந்த 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.
பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் இந்த படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் ஆா்வமாக ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனா். வரும் 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியரின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக்டோபா் 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களையும் இணையதளத்தில் பாா்த்து அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...