Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் (அடுத்த மாதம்) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அக்டோபர் 9-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு 10-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிடப்படும்போதுதான் இது உறுதிப்படுத்தப்படும்’ என்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive