Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டில் 455 எம்பிபிஎஸ், 114 பிடிஎஸ் இடங்கள் கிடைக்கும்: மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தகவல்


சென்னை: நடப்பு கல்வியாண்டில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் 455 எம்பிபிஎஸ், 114 பி.டி.எஸ். என இடங்கள் என மொத்தம் 569 இடங்கள் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்திட்டத்தின் கீழ் 20 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 130 இடங்களும், 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 325 இடங்களும், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 14 இடங்களும், 20 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 101 இடங்களும் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு 554 இடங்கள் கிடைத்த நிலையில், இந்தாண்டு 569 இடங்கள் கிடைத்துள்ளன. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 15 இடங்கள் கூடுதல்.

கவுன்சலிங்கின்போது கடந்தாண்டு 10,135 இடங்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலையில் 2022-23 கல்வியாண்டில் 10,385 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் நீட் தேர்வை எழுதிய மாணவ-மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். கவுன்சலிங்கிற்கு இன்னும் குறுகிய கால அவகாசம் இருப்பதால், ஆன்லைன் கவுன்சலிங்கை தேர்வு செய்யலாம். இருப்பினும் 7.5% உள் ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற சிறப்பு பிரிவினருக்கு நேரில் கலந்தாய்வு நடத்தப்படும். இந்தாண்டு சுமார் 40,000 பேர் விண்ணப்பிப்பார்கள் என மருத்துவ மாணவர் சேர்க்கை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்களில் விண்ணப்ப செயல்முறை தொடங்கிய இரண்டு நாட்களுக்குள் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய ஏழு கல்லூரிகளில் கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலையில் 580 இடங்கள் உள்ளன. மேலும், பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் கோழி வளர்ப்பு தொழில்நுட்பத்தில் 40 இடங்களும், பி.டெக் பால் தொழில்நுட்பத்தில் 20 இடங்களும் உள்ளன.

இந்த மாதம் 26ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் அப்போது அதிகமானோர் விண்ணப்பிப்பார்கள். கால்நடை மருத்துவத்தில் இளங்கலைக்கு, உயிரியல் (100), இயற்பியல் (50), வேதியியல் (50) மதிப்பண்களின் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும், குடியுரிமை இல்லாத இந்திய பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். மற்றவர்கள் விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட15 நாட்களுக்குள் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

...




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!