திருக்குறள் :
பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: இரவு / Mendicancy
குறள் 1053:
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. பொருள் - ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்
பழமொழி :
The secret of success is the consistency of purpose.
நோக்கத்தின் உறுதியே வெற்றியின் ரகசியம்
இரண்டொழுக்க பண்புகள் :
1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன்.
2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன்.
பொன்மொழி :
ஊக்கத்தை கைவிடாதே. அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு - அறிஞர் அண்ணா
பொது அறிவு :
1.தமிழ்நாட்டில் மதுவிலக்கை முதலில் கொண்டு வந்தது யார் ?
ராஜாஜி .
2.பாரதியார் நடத்தி வந்த பத்திரிக்கையின் பெயர் என்ன?
இந்தியா.
English words & meanings :
hon·ey·creep·er - a type of bird that sucks nectar from flowers. Noun. தேன் சிட்டு. பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
பசும்பாலை போன்று தேங்காய் பாலில் லாக்டோஸ் கிடையாது. அதனால் லாக்டிக் அழற்சி பிரச்சினை உள்ளவர்கள் பசும் பாலுக்கு பதிலாக உணவில் தேங்காய் பாலை சேர்த்துக் கொள்ளலாம்.
செப்டம்பர் 08
அனைத்துலக எழுத்தறிவு நாள்
அனைத்துலக எழுத்தறிவு நாள் உலகெங்கும்[1] செப்டம்பர் 8ம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. இது 1966ம் ஆண்டு தொடக்கம் கொண்டாடப்படுக்கிறது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
நீதிக்கதை
உருவத்தை பார்த்து எடை போடாதே!
28 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான். அப்பா இங்கே பாருங்கள்... மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று! அவனருகில் இருந்த அவனது அப்பா சிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாபபட்டுக்கொண்டனர். மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.
அப்பா மேலே பாருங்கள், மேகங்கள் நம்மோடு வருகின்றன என்றான். இதைக்கேட்டு தாங்க முடியாத தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம் நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர். அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக் கொண்டே சொன்னார்.
நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்… என் மகன் பிறவிக் குருடு இன்றைக்கு தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார். அன்பு நண்பர்களே... உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை இழந்துவிடலாம். சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம். உருவத்தை பார்த்து யாரும் யாரையும் எடை போடவேண்டாம்.
இன்றைய செய்திகள்
08.09.22
# கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2வது நாளாக உபரி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
# நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை அரசு மின்னணு சந்தை மூலம் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு: அஞ்சல் துறை, பொது சேவை மையத்துடன் ஒப்பந்தம்.
# தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் மாநில கல்விக் கொள்கை வெளியிடப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
# கடந்த 2018-19 மற்றும் 2019-20ம்ஆண்டுகளில் ‘முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கு’ தேர்வானவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருது தொகைக்காக தமிழக அரசு ரூ.16.30 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
# 11 டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்.
# டெல்லியில் வரும் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
# கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது பெங்களூரு நகரம்.
# கரோனா வைரஸுக்கு எதிராக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழி சொட்டு மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
# உலகில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: மும்பைக்கு 3-ம் இடம்.
# இந்தியா மற்றும் சீனாவுடன் உறவை மேம்படுத்தும் வெளியுறவு கொள்கை: ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல்.
# ஒரே சீசனில் இரண்டு இரானி கோப்பை கிரிக்கெட் - இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.
Today's Headlines
# Surplus water release from Krishnagiri dam for 2nd day: Flood alert for 5 districts
# Arrangement for sale of weavers, and artisans' products through Government e-market: agreement with Department of Posts, Public Service Centre.
# Minister of Higher Education K. Ponmudi has said that the work of framing the state education policy for Tamil Nadu will be completed quickly and the state education policy will be published soon.
# In 2018-19 and 2019-20, the announcement has been made about the candidates for the 'Multavar State Sports Award'. The Government of Tamil Nadu has allocated a fund of Rs 16.30 lakh for the award.
# Flood alert for 11 Delta districts: 1.10 lakh cubic feet of water released from Mettur dam.
# Environment Minister Gopal Roy has said that firecrackers' production, sale, and use will be banned in Delhi until January 1, 2023.
# The city of Bengaluru is flooded due to the heaviest rain record in the last 75 years.
# The Drug Control Authority of India has approved Bharat Biotech's anti-coronavirus nasal drops.
# Most traffic-congested cities in the world: Mumbai in 3rd place.
# Russian President Putin approves foreign policy to improve relations with India and China.
# Two Irani Cup cricket in one season - Cricket Board of India announced.
Prepared by
Covai women ICT_போதிமரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...