Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.09.2022

 


 

  திருக்குறள் :

பால்: பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: இரவு

குறள் : 1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

பொருள்:
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்

பழமொழி :

The resolved mind has no cares.

துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தேனீ எறும்பு போல சுறுசுறுப்பாக உழைக்க முயற்சிப்பேன். 

2. என்னுடைய உழைப்பு பெயருக்காக அல்ல பேர் வாங்கும் அளவுக்கு உழைப்பேன்

பொன்மொழி :

கொல்லாமை என்னும் நெறி பலவகையான சுகங்களை அளிக்கவல்லது.

பொது அறிவு :

1.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரங்கம் உள்ளன ?

 64 .

 2.பைசா கோபுரத்தில் மொத்தம் எத்தனை படிக்கட்டுகள்?

 294.




English words & meanings :

graf·fi·ti - Drawings or inscriptions made on a wall without permission. Noun. There was bold graffiti on the wall. அனுமதி இல்லாமல் வரையப்படும் சுவர் அடி ஓவியம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கார்பன் அணுக்களின் சங்கிலியால் ஆனது. அதனால் தேங்காய் பாலை சேர்த்துக் கொள்வது நல்லது. இது உடலின் மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கும்.

NMMS Q 55:

280 நபர்கள் ஒரு விமானத்தில் இரண்டு முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள்__________ முறை பயணம் செய்யலாம்? 

விடை: 10

நீதிக்கதை

ஏன் புற்களை சாப்பிடுகிறீர்கள்?

ஒரு பணக்கார மேனேஜர் ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தபொழுது சாலையில் இருவர் புற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்க்கிறார். இதைப் பார்த்ததும் அவர் வியப்புற்று டிரைவரிடம் காரை நிறுத்தக் கூறுகிறார்.

பின் அந்த இருவரின் அருகில் சென்று, நீங்கள் ஏன் இப்படி புற்களை உண்கிறீர்கள் எனக் கேட்கிறார். உடனே அவர்களில் ஒருவன், எங்களிடம் உணவு சாப்பிடுவதற்கான பணம் இல்லை, எனவே நாங்கள் புற்களை தான் உண்ண வேண்டும் என்கிறார். உடனே அந்த மேனேஜர், சரி நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள், நான் உங்களுக்கு உண்ண கொடுக்கிறேன் என்கிறார்.

உடனே அந்த ஏழை, ஐயா.. எனக்கு ஒரு மனைவியும் ஐந்து குழந்தைகளும் இருக்கிறார்கள். அதோ அந்த மரத்தடியில் இருக்கிறார்கள் என்கிறார். உடனே மேனேஜர்,அவர்களையும் அழைத்து வா எனக் கூறி விட்டு, பக்கத்தில் நின்றிருந்த மற்றொரு ஏழையிடம்... நீயும் இவர்களுடன் வரலாம் என்கிறார். உடனே அந்த மற்றொரு ஏழை, ஐயா... எனக்கு ஒரு மனைவியும் ஏழு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்கிறார்.

உடனே அந்த மேனேஜர், சரி அவர்களையும் அழைத்து வாருங்கள் என்கிறார். இவர்கள் அனைவரையும் அந்த பெரிய காரில் அமர்த்தி, அந்த மேனேஜர் அவர் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த ஏழைகளில் ஒருவர், ஐயா.. உங்களுக்கு மிகவும் இளகிய மனது, எங்கள் எல்லோரையும் உங்களுடன் இப்படி அழைத்துக் கொண்டு செல்கிறீர்களே என்கிறான்.

மேனேஜர் உடனே, இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கின்றது, உங்களுக்கு என் வீடு அமைந்துள்ள இடம் மிகவும் பிடிக்கும். ஏறத்தாழ அங்கே உள்ள புற்கள் ஒரு மீட்டர் அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றார்.

நீதி:யாரையும் எளிதில் நம்பிவிடாதே...

இன்றைய செய்திகள்

07.09.22

* முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு.

*ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: 1.36 லட்சம் கன அடியாக நீர்வரத்து உயர்வு.

*திண்டிவனம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு.

* இளைய சமுதாயத்துக்கு தரமான கல்வி வழங்கவே புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது என அதன் வரைவுக் குழு தலைவரும், இஸ்ரோ முன்னாள் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் தெரிவித்துள்ளார்.

* பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் அடுத்த வாரத்தில் விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

* நாடு முழுவதும் 14,500  பள்ளிகள் பிஎம் ஸ்ரீ   (PM-SHRI) திட்டத்தின் கீழ் மாடல் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிரிழந்தனர்.

* பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகி உள்ளார்.

* கைப்பந்து போட்டி: புரசைவாக்கம் பெண்கள் அரசு பள்ளி 'சாம்பியன்'

* இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

* ராஞ்சியில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு  சேலம்- ஜலகண்டாபுரம் வீரர்  
மணிவண்ணன்    தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Today's Headlines

*High Court refuses to stay the Ordinance for admission to postgraduate medical students.

 *Okanagan Cauvery floods again: Water flow rises to 1.36 lakh cubic feet.

 * Pallavar era Kotravai sculpture found near Tindivanam.

 * K. Kasthuri Rangan, Chairman of the Drafting Committee and former ISRO Chairman, said that the new National Education Policy was created to provide quality education to the younger generation.

* The case filed against the 10 percent reservation system for the economically backward upper classes will be heard next week in a 5-judge constitution bench comprising the Chief Justice of the Supreme Court, the Chief Justice said.

 * 14,500 across the country Prime Minister Modi has said that the schools will be upgraded to model schools under the PM-SHRI scheme.

*  A powerful earthquake struck China's Sichuan province yesterday.  In this, 7 people died.

 * Liz Truss has been elected as the new Prime Minister of Britain.

 * Volleyball Tournament: Purasaivakkam Girls Government School 'Champion'

*The Board of Cricket in India has announced that it has chosen a new primary sponsor for the Indian cricket team.

 * Salem- Jalagandapuram player Manivannan has been selected for the Indian  Paralympic cricket tournament to be held in Ranchi.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive