தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின்போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ்வழியில் பயின்றுள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர் . ஆனால் , அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே , முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் , தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான ஆவணங்களை அரசாணை ( நிலை ) 82 , மனிதவள மேலாண்மை ( எஸ் ) துறை நாள் 16.08.2021 ல் இணைப்பில் கண்ட படிவத்தில் அனைத்து ஆவணங்களையும் 1 - ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று , 11-12ஆம் வகுப்பு / டிப்ளமோ படிப்பு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று , இளங்கலைப் பட்டத்தினை ( UG Degree ) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று , முதுகலைப் பட்டத்தினை ( PG Degree ) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று , கல்வியியல் இளங்கலைப் பட்டத்தினை ( B.Ed. Degree ) தமிழ் வழியில் பயின்றதற்கான சான்று மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை ( B.P.Ed. Degree மற்றும் M.P.Ed. , Degree ) கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை உரிய அலுவலரின் மேலொப்பத்துடன் பெற்று தயார் நிலையில் வைத்திருக்குமாறு 18.08.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் , இதற்குரிய link முகவரி பின்னர் தெரிவிக்கப்படும் என பத்திரிக்கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட கீழ்க்கண்ட link முகவரி தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , இம்முகவரியில் https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/ விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை 26.08.2022 முதல் 30.08.2022 அன்று மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்திட தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...