தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளாளர் சே.நீலகண்டன்தமிழக முதலமைச்சர் மு .க . ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திய நாட்டின 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 01.07.2022 முதல் 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று என அறிவித்துள்ளீர்கள். வழக்கமான நடைமுறையை சற்று தாமதமாக அறிவித்திருந்தாலும் மகிழ்வையும் வரவேற்பையும் எமது இயக்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். அதே வேளையில் மத்திய அரசு 2022 ஜனவரி முதல் வழங்கியுள்ள அகவிலைப்படியை, 2022 ஜூலை முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப வழங்கப்படும் அகவிலைப்படி என்பது வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாகும். அதையே காலம் தாழ்த்தி வழங்குவதே அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தற்போது வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படியை 01.01.2022 முதல் அறிவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.ஏற்கனவே ஜனவரி மாதம் 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிய போதே நிதிநிலையை காரணம் காட்டி அகவிலைப்படியை தாமதமாக அறிவித்து, அகவிலைப்படி நிலுவையும் வழங்கப்படவில்லை. எனவே தற்போதும் அதைப் போன்றதொரு நடைமுறை பின்பற்றப்படுவது ஏற்புடையதாக இல்லை என்பதை எங்கள் பேரியக்கத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மத்தியஅரசு அகவிலைப்படியை அறிவிக்கும் பொழுதெல்லாம் அதைப் பின்பற்றி உடனடியாக அறிவித்து வந்தார். எனவே அதையே பின்பற்றி அகவிலைப்படி உயர்வினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்வினை அளித்து நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...