தமிழ்நாட்டில் தனித்துவமான (
Distinct ) மாநில கல்விக்கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை
மேற்கொண்டு , அரசாணை ( நிலை ) எண் . 98 பள்ளிக்கல்வித் ( வரவு செலவு -2 )
துறை , நாள் . 01.06.2022 ன் படி மாண்புமிகு நீதியரசர் ( ஓய்வு )
திரு.த.முருகேசன் , முன்னாள் புதுதில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர்
அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.
மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள் | கல்வியாளர்கள் / தன்னார்வலர்கள் | தொண்டு நிறுவனங்கள் / ஆசிரியர்கள் | ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 1 மாணவர்கள் பெற்றோர்கள் 1 தனியார் கல்வி நிறுவனத்தைச்சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோ கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் அல்லது அலுவலக முகவரிக்கு 15.09.2022 ஆம் தேதி வரை அனுப்பிவைக்கலாம் என 14.07.2022 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.
மாநிலக் கல்விக் கொள்கைக்குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து 15.10.2022 ஆம் தேதி வரை கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவ்வாறே கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...