அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கம்யூட்டர் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்துடன் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றையும் இணைத்து அனுப்பினர். இவர்களுக்கான கணிணி வழி தேர்வு பிப்.,12 முதல் 20 வரை 16 கட்டமாக நடந்தது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 859 பேர் எழுதினர்.
இத்தேர்வு முடிவை ஜூலை 4 ல் வெளியிட்டனர்.இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் வாரியம் அனுப்பியுள்ள படிவத்தின் படி தமிழ்வழி சான்றுகளை பெற்று ஆக., 22 முதல் 25 க்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என கூறியுள்ளது. வாரியத்தின் இத்திடீர் உத்தரவு தேர்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சான்றுக்கு அவகாசம் தேவை
எஸ்.சேதுசெல்வம், மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்:தேர்வு முடிந்து சான்றுகள் சரிபார்ப்பு பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் துவக்கியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே விண்ணப்பத்துடன் அனுப்பிய தமிழ் வழி சான்றை ஏற்கமுடியாது. அதற்கு மாற்றாக தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இரு சான்று மாதிரிப்படிவத்தின் படியே பள்ளி, கல்லுாரி, பல்கலைகளில் சான்றினை பெற்று அனுப்புமாறு கூறியுள்ளது.
பல்கலையில் ரூ.800 கட்டணம் செலுத்தி அவர்கள் வழங்கிய படிவத்தில் சான்று பெற்று இணைத்துள்ளனர். தற்போது மறுபடியும் வாங்கி ஆக.,22 முதல் 25க்குள் பதிவேற்ற கூறுவது தான் சிரமமாக உள்ளது. எனவே தமிழ் வழி சான்று பெற 15 நாள் கால அவகாசம் வழங்குவதோடு, கல்வி நிறுவனங்களுக்கும் இது பற்றிய சுற்றறிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்ப வேண்டும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...