மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணி நிரப்பப்பட உள்ளது. வரும் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுகுறித்து, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை: சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மாநில தத்து வள ஆதார மையத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவற்றை http://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் வரும் 26ம் தேதி மாலை 5.30 மணிக்குள், இயக்குனர், மாநில தத்து வள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...