Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.08.2022

    

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: உழவு

குறள் : 1034
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

பொருள்:
உழுவதால் தானிய வளமும் அதனால் அருளும் உடைய உழவர்கள், தம் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும்படி செய்வர்.

பழமொழி :

A little labour, much health.

உழைப்பே ஆரோக்கியம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

2.மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமான உபயோகிப்பேன்

பொன்மொழி :

ஒன்று உங்களுக்கு
முக்கியமென்றால்.. தோல்விக்கே
அதிக வாய்ப்பு என தெரிந்தாலும்..
அதை நீங்கள் செய்ய வேண்டும்..!

பொது அறிவு :

1.இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது எது?

 வேளாண்மை

 2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?

 ஆந்திரப்பிரதேசம்.

English words & meanings :

Wam-bled- an unsteady or rolling movement. Verb. நிதானம் இன்றி நடப்பது. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :




சப்போட்டா இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.

NMMS Q 46:

2Y , 5V , _______ , 17J , 26A. 

 Ans : 10Q

ஆகஸ்ட்  23


அடிமை வணிகத்தையும் அதன் ஒழிப்பையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள் (International Day for the Remembrance of the Slave Trade and its Abolition) ஆண்டு தோறும் ஆகத்து 23 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இத்தினம்  குறிப்பாக 1791 ஆகத்து 22ம் திகதி இரவும் ஆகத்து 23ம் திகதியும் தற்போதைய ஹெய்டி இல் (island of Saint Domingue) இடம் பெற்ற அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நீதிக்கதை

நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி

ஒரு அழகான நகரத்தின் நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர் அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். அதற்கு அந்த வயதான காவலாளி ஏன் கேட்கிறாய் தம்பி? இந்த ஊரில் வந்து தங்கப் போகிறாயா? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

ஆமாம் பெரியவரே. நான் முன்பு இருந்த ஊர் மிகவும் மோசம். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டு கொள்வார்கள். ஒருவரைப் பற்றி ஒருவர் தவறாக பேசிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருப்பார்கள். அதனால் எனக்கு எப்பொழுது அந்த ஊரைவிட்டு வருவோம் என்று இருந்தது. அதனால்தான் இந்த ஊர் எப்படி? என்று கேட்டேன் என்றான்.

தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட மிகவும் மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊர் ஏற்றதாக இருக்காது தம்பி என்று கூறி, அந்த வாலிபனை வெளியே வழியனுப்பி வைத்தார்.

சிறிது நேரம் கழித்து, அவ்வழியாக வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான். ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி? என்று கேட்டான். 

பெரியவர் சிரித்துக்கொண்டே, ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்டார். ஐயா! எனக்கு மூன்று குழந்தைகளே இருக்கின்றார்கள் என்றான். அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வந்திருக்கிறாய்? உங்க ஊரிலேயே வியாபாரம் செய்யலாமே? என்றார் காவலர்.

எங்க ஊர் ரொம்ப நல்ல ஊர். எங்க ஊர் மக்கள் அனைவரும் பாசமாக பழகக்கூடியவர்கள். என் குடும்பம் இப்போழுது மிகுந்த வறுமையில் இருக்கின்றது. நான் இந்த ஊருக்கு என் குடும்பத்தின் வறுமையைப் போக்க வியாபாரம் செய்து சம்பாதிப்பதற்காகத்தான் வந்தேன் என்றான். நான் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டு மீண்டும் எங்க ஊருக்கு சென்று விடுவேன் என்று கண் கலங்கியபடியே கூறினான்.

அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் நல்லவர்கள்தான். தைரியமாக நீ இந்த ஊரில் வியாபாரம் செய்யலாம் என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், பெரியவரின் செயலைப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அவரிடம் முதலில் வந்தவரிடம், இந்த ஊர் மிகவும் மோசமானது என்று சொன்னீர்கள். இவரிடம் மட்டும் நல்ல ஊர் என்று சொல்கிறீர்களே ஏன்? என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர் இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம் எப்படி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும் என்றார்.

இன்றைய செய்திகள்

23.08.22

* தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்ய நர்சரிகளுக்கு தடை விதித்து அறிவிப்பாணை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் அரசுப் பணித் தேர்வுகளுக்கு, தமிழ் தகுதித் தேர்வு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

* அரசுப் பள்ளி, கல்லூரிகளின் 25 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் பயண அட்டை: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்.

* இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்: 5 வயதுக்குட்பட்ட 82 குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர்.

* சோமாலியா ஓட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு: 70 பேர் படுகாயம்; 106 பேர் பத்திரமாக மீட்பு.

* சீனாவின் உளவு கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கை துறைமுகத்தில் இருந்து வெளியேறியது.

* கடைசி ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி: தொடரையும் கைப்பற்றியது.

* 10 அணிகள் பங்கேற்கும் அஞ்சல் துறையினருக்கான அகில இந்திய கால்பந்து போட்டி; சென்னையில் நேற்று தொடக்கம்.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பிரான்சு வீராங்கனை கரோலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

* The Madras High Court has ordered the Tamil Nadu government to issue a notification banning nurseries from growing and selling foreign saplings in Tamil Nadu.

 * The Chennai Meteorological Department has said that there is a possibility of widespread rain and heavy rain at a few places in Tamil Nadu for 4 days.

* The Government of Tamil Nadu has announced that the Tamil Eligibility Test will be implemented for the civil service examinations in Tamil Nadu.

 * Travel cards for 25 lakh students of government schools and colleges soon: Transport department officials inform.

* Tomato fever spread in India: 82 children under 5 years affected.

* Death toll rises to 40 in Somalia hotel attack: 70 seriously injured;  106 people were rescued safely.

 * China's spy ship 'Yuan Wang 5' leaves Sri Lankan port.

 * Last ODI: New Zealand beat West Indies to win: clinched the series.

 * 10-team A postal football tournament;  Started yesterday in Chennai.

 * Caroline Garcia of France won the women's singles title at the Cincinnati Open tennis tournament.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive