Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி: கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று ரஞ்சிதா முதலிடம்..!!

full

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கழக இயக்ககத்தில் தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

1.69 லட்சம் பேர் விண்ணப்பம்:

பி.இ., பி.டெக்., பி.ஆர்க். படிப்புகளில் சேர 1.69 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு ஆக.20ல் பொது கலந்தாய்வு தொடங்குகிறது:பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20ம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 20 முதல் 23ம் தேதி வரை 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுப் பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 21 வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

7.5% இடஒதுக்கீட்டில் 22,000 பேர் பயன்பெறுவர்:

பி.இ. மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் 22 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர். 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் பி.இ. படிப்பில் சேரலாம்.

9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்க நடவடிக்கை:

தமிழ்நாட்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 1,96,627 இடங்களும், அண்ணா பல்கலையில் 900இடங்களும் உள்ளன. இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரும் 9,981 அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்பு:

இந்தாண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளன. பி.இ. மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இந்தாண்டு ரேண்டம் எண் வெளியீடு இல்லை. தொழிற்கல்வி படித்த மாணாக்கர்களுக்கு பொறியியல் படிப்பு சேர்க்கையில் 2 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

பி.இ. கட்ஆப்-ல் ரஞ்சிதா முதலிடம்:

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்கள் பெயர்களை அமைச்சர் வெளியிட்டார். பி.இ. கட்ஆப்-ல் 200க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தை சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான புதிய பாடத்திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தரவரிசை பட்டியலில் குறை இருந்தால் புகாரளிக்கலாம்:

பி.இ. தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால், குறை இருந்தால் 19ம் தேதி வரை பதிவு செய்யலாம். TNEA சேவை மையத்தில் குறைகளை பதிவு செய்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும். தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு குறைகள் இருந்தாலோ 18004250110ஐ அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive