ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper II ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் 26.04.2022 வரை வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 க்கு 2,30,878 பேரும் மற்றும் தாள் 11 க்கு 4,01,886 பேரும் மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை மனுக்கள் இவ்வலுவலகத்திற்கு பெறப்பட்டு வருகிறது .
ஆகையால் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையினை ஏற்று , ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ( TNTET Paper 1 and Paper Il ) க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் 11.07.2022 முதல் 16.07.2022 வரை திருத்தம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் திருத்தம் மேற்கொள்ளும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...