கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள காலியிடம் குறித்து லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, கல்வித் துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
கேந்திரிய வித்யாலயாவில் நாடு முழுதும் 12 ஆயிரத்து 44 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 1,162 இடங்களும், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் 1,006 இடங்களும் காலியாக உள்ளன. இதேபோல், ஆசிரியர் அல்லாத பணிகளில் 1,332 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கல்விப் பணி பாதிக்காமல் இருக்க, நாடு முழுதும் 9,161 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...