Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IGNOU பல்கலை UG & PG சேர்க்கைக்கான மறுபதிவு தேதி நீட்டிப்பு...!

 samayam-tamil

 இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (IGNOU), ஜூலை 2022 சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவை நீட்டித்துள்ளது. அதன்படி, IGNOU ஜூலை 2022 -க்கான அனைத்துப் படிப்புகளுக்கும் மீண்டும் பதிவு செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது. முன்னதாக இந்த தேதி ஜூலை 15 வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

IGNOU பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளை படிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இது குறித்த மேலும் தகவலுக்கு ignou.ac.inand என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம். IGNOU பல்கலைக்கழகம் ஜூலை 2022 சேர்க்கைக்கான மறுபதிவு செயல்முறையை மே 20 முதல் தொடங்கியது.

விண்ணப்பதாரர்கள் படிவம் சமர்ப்பித்த 30 நாட்களுக்குப் பிறகு IGNOU மறுபதிவு நிலையைச் சரிபார்க்கலாம். IGNOU மறுபதிவு படிவத்தை சமர்ப்பிக்காமல் அடுத்த செமஸ்டர் அல்லது கல்வியாண்டில் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்படிவத்தை எப்படி நிரப்புவது?

முதலில், IGNOU-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் - ignou.ac.in.

இப்போது, முகப்பு பக்கத்தில் காணப்படும் "Re-registration" தாவலுக்குச் செல்லவும்.

அனைத்து தகவல்களையும் படித்து, "Proceed for Re-Registration" என்பதைக் கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உள்நுழைவு சாளரம் திரையில் திறக்கும்.

பதிவு ID மற்றும் நிரல் குறியீட்டைக் கொண்டு உள்நுழையவும்.

IGNOU இன் மறு பதிவு படிவத்தை நிரப்பவும்.

ஆன்லைன் முறையில் IGNOU மறு பதிவுக் கட்டணத்தைச் செலுத்தவும்.

கட்டணம் செலுத்திய பிறகு, மறு பதிவு படிவத்துடன் கட்டண ரசீதை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

IGNOU ஜூன் 2022 கால இறுதித் தேர்வு ஜூலை 22 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும். IGNOU 2022 இன் ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் IGNOU மறு பதிவு படிவம் 2022 இல் ஏதேனும் முரண்பாடுகளைக் கண்டால், அவர்கள் உடனடியாக பல்கலைக்கழக அதிகாரிகளையும் அந்தந்த பிராந்திய மையத்தையும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பு செயல்முறை ஆகிய இரண்டின் போது IGNOU மறுபதிவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் மாணவர்கள் குறுக்கு சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறார்கள். இக்னோ அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் முரண்பாடு குறித்து தெரிவிக்க வேண்டும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive