தமிழக பள்ளிக் கல்வி துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.,க்கள் பங்கேற்கும் கூட்டம், மாதம்தோறும் நடத்தப்படும். மூன்று மாதங்களாக, பொது தேர்வு மற்றும் அதற்கான பணிகள் இருந்ததால், இந்த கூட்டம் நடக்கவில்லை.புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.
பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ், கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.கடந்த, 2021- - 22ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை பெருமளவு அதிகரித்தது. ஆனால், புதிய கல்வி ஆண்டில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேசப்பட உள்ளது.மேலும், ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...