தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
முந்தைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்கியதுபோக 55,819 மடிக்கணினிகள் பள்ளிகளின் கையிருப்பில் உள்ளன. இதற்கிடையே, ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதலான மடிக்கணினிகள் தேவைப்படுவதால், பள்ளிகளில் கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணினி ஆய்வகங்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுமதி வழங்கினார்.
அரசு அறிவுறுத்தல்
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமாரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதைத் தொடர்ந்து, அரசுஅறிவுறுத்தலின்படி, மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமியின் படங்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பயிற்சிக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...