இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் UG வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது அந்த வகையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் இதற்கான நுழைவுசீட்டு நாளை இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதுவதற்கு விண்ணப்பங்களை செய்துள்ளனர். மேலும், நாடு முழுவதும் உள்ள 546 நகரங்களில் இத்தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சீட்டு மூலம் மாணவர்கள் தேர்வு மையங்கள், இடம் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகள் தொடர்பான விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்தந்த தேர்வு மையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...