Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இணையதளத்தில் இன்று பிளஸ் 1 விடைத்தாள் நகல்

 பிளஸ் 1 தேர்வு விடைத்தாள் நகல், இன்று வழங்கப்பட உள்ளது.அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிளஸ் 1 பொது தேர்வு விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். இன்று மதியம், 12:00 மணி முதல், விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.விடைத்தாள் நகல் கிடைத்த பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், தேர்வுத் துறை இணையதளத்தில், அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.  பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, இரு நகல்கள் எடுத்து, நாளை பகல், 12:00 மணி முதல் வரும், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட அரசு தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்; கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில், முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.

மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடம், 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் மற்றும் மறுமதிப்பீடு ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive