சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை
மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல்
தொடங்கப்பட்டது. இந்த திருவிழா ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
அதன் முக்கிய திருவிழா ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதனால் சேலம்
மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அன்றைய தினம் இயங்காது
என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு கருவூலங்கள் குறிப்பிட்ட
பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு பொருந்தாது எனவும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதனை ஈடு செய்யும் வகையில் செப்டெம்பர் 3 ஆம் தேதி (சனிக்கிழமை ) முழு வேலை நாளாக செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து திருவிழாவில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...