சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் http://cbse.result.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.
12-ம் வகுப்பு பொது தேர்வை போல இந்த தேர்வுகளும் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்த இரண்டு கட்ட தேர்வுகளுக்கும் சேர்த்தே தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி நாடு முழுவதும் தேர்வு எழுதிய 20,93,978 மாணவர்களில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 94.4 % ஆகும்.
நாட்டில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தின் 98.78% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தேசிய அளவில் 93.80% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.95.21% மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...