Revision Exam 2025
Latest Updates
2022 -23 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை -31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு
2022-23-ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 31.10.2022க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க உத்தரவு
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.07.2022
திருக்குறள் :
பால்:பொருட்பால்
இயல்:குடியியல்
அதிகாரம்: பண்புடைமை
குறள் : 999
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
பகலும்பாற் பட்டன்று இருள்.
பொருள்:
நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம்.
பழமொழி :
A useful trade is a mine of gold
கற்கும் கைத்தொழில் என்றுமே கைகொடுக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.
2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்
பொன்மொழி :
நம்பிக்கையை இழந்து எல்லாம்
முடிந்துவிட்டது என்று
எண்ணாமல் இது முடிவு
இல்லை.. ஒரு சிறிய வளைவு
தான் என்றெண்ணி நாம்
முன்னேற வேண்டும்..!
பொது அறிவு :
1.மலேரியா என்பதன் பொருள் என்ன ?
சுத்தமற்ற காற்று.
2.மனித உடலின் வேதி சோதனை சாலை எனப்படும் பாகம் எது?
ஈரல்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.
NMMS Q 35:
உராய்வு விசை எப்பொழுதும், பொருள் இயங்கும் திசைக்கு _________செயல்படும்.
விடை: எதிர் திசையில்
ஜூலை 29
வின்சென்ட் வில்லியம் வான் கோ
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா (இடச்சு: [ˈvɪnsɛnt ˈʋɪləm vɑn ˈɣɔx] (கேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் முடிந்தது.
பன்னாட்டுப் புலி நாள்
பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் ஜூலை 29இல் கொண்டாடப்படும் நாளாகும்.[1] இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில் உருவாக்கப்பட்டது.[2] இந்நாளின் நோக்கம் புலிகளின் இயற்கை வாழ்விடங்களைக் காப்பாற்றுவதற்கான உலகளாவிய அமைப்பை ஏற்படுத்தி, புலி வளம்பேணும் சிக்கல்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வை மேம்படுத்தி அவர்களது ஆதரவைப் பெறுவதாகும்.[3
நீதிக்கதை
மரவெட்டியின் வேண்டுதல்
மரம் வெட்டும் தொழிலாளி ஒருவன், மரத்தில் ஏறி விறகு கட்டைகளை வெட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒருமுறை மரத்தில் ஏறியவன் கிளைகளை வெட்டிக் கொண்டே மேல் நோக்கி சென்றான். சிறிது நேரத்தில் மரத்தின் உச்சிக்கு சென்றுவிட்டான். அப்போதுதான் கீழே கவனித்தான். கால் வைத்து இறங்குவதற்கு கூட கிளை இல்லாமல் எல்லாவற்றையும் வெட்டிவிட்டு மேலே சென்றிருந்தான்.
அந்த உயரத்தில் இருந்து கீழே பார்ப்பதற்கு அவனுக்கு பயமாக இருந்தது. கீழே இறங்க முடியாதே என கவலைப்பட்ட அவனுக்கு பயம் குடலைப் புரட்டியது. உடனே கடவுளிடம் வேண்டினான். கடவுளே, நீ என்னை பத்திரமாக தரையிறக்கினால், நான் என் பசுவை உன் கோவிலுக்கு தானமாக தருகிறேன் என்றான். வேண்டிக்கொண்டிருக்கும்போதே லேசாக சறுக்க, மரத்தில் இருந்து வழுக்கி சற்று கீழே வந்தான். இப்போது முன்புபோல உயரம் தெரியவில்லை. இப்போது அவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.
பசு இல்லை கடவுளே, நான் உனக்கு எனது ஆட்டைத் தருகிறேன் என மீண்டும் வேண்டினான். இப்போதும் சறுக்கியது. இன்னும் கீழே வந்தான். ஆட்டை என்னால் தர முடியாது கடவுளே, நான் உனக்கு கோழியை தருகிறேன் என்றான். மீண்டும் சறுக்கி வழுக்க, ரொம்பவே கீழே இறங்கிவிட்டான். இப்போது அவனுக்கு பயம் போய்விட்டது. என்னால் கோழியும் தர முடியாது கடவுளே, நான் உனக்கு ஒரு முட்டையை படைக்கிறேன் என்றான். இப்போதும் சறுக்கல் எடுக்க இன்னும் கீழே இறங்கினான். இப்போது அவன் தரையில் இருந்து சில அடிகள் உயரத்தில் இருந்தான்.
உடனே அவன், உனக்கு எதையும் தர முடியாது கடவுளே, நானே கீழே இறங்கிக் கொள்கிறேன் என்று மரத்தில் இருந்து கீழே குதித்தான். விறகு கட்டைகளை பொறுக்கிக் கொண்டு மகிழ்ச்சியாக பாடிக்கொண்டு வீடு திரும்பினான். பயம் விலக விலக மனிதனின் நடவடிக்கைகள் படிப்படியாக மாறிவிடுகின்றன.
இன்றைய செய்திகள்
29.07.22
★செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: சங்க காலம் முதல் சமகாலம் வரை - அனைவரையும் வியக்கவைத்த நிகழ்த்துக் கலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள்.
★பள்ளியின் சொத்துகளை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
★சென்னையில் குரங்கு அம்மை பரிசோதனை ஆய்வகம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
★இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விரும்பும் நிறுவனங்கள் ஆகஸ்ட்10-ம் தேதிக்குள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
★அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதலை நடத்த வடகொரியா முழுஅளவில் தயாராக இருக்கிறது என அதன் தலைவர் கிம் ஜாங் அன் கூறியுள்ளார்.
★72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது.
★இத்தாலி நாட்டில் நடந்து வரும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
Today's Headlines
★Chess Olympiad Inauguration: Sangam to Contemporary - Spectacular performance and variety.
★Parents responsible for students damaging school property: Education Department notice
★ Monkey Measles Testing Laboratory in Chennai: Minister M. Subramanian inaugurated.
★Amidst the spread of monkey measles in India, the central government has announced that companies wishing to find a vaccine for this disease should submit their interest by August 10.
★ North Korea is fully prepared to launch a nuclear attack against the United States, its leader Kim Jong Un has said.
★The Commonwealth Games in which 72 countries are participating started yesterday in England.
★The Indian athlete has created a historic record by winning gold at the ongoing World Under-17 Wrestling Championship in Italy.
Prepared by
Covai women ICT_போதிமரம்