உங்கள் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளன.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
கடந்த 2020-21-ஆம் ஆண்டுக்கு 8.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது அது 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது.5 கோடி தொழிலாளா்கள் உறுப்பினா்களாக உள்ள இபிஎஃப்ஓ அமைப்பில், கடந்த 1977-78 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தபட்ச அளவாக 2021-22 நிதியாண்டுக்கு 8.1 சதவீத வட்டி நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 2017-18 நிதியாண்டில் 8.55 சதவீதமாகவும், 2016-18-இல் 8.65 சதவீதமாகவும், 2018-19-இல் 8.65 சதவீதமாகவும், 2019-20-இல் 8.5 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை மட்டும், பயனாளர்களின் வங்கிக் கணக்கில், வரவு வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரி.. நம்முடைய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? அதற்கு வட்டி எவ்வளவு வரும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? அது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்லை. வீட்டிலிருந்தே எஸ்எம்எஸ், ஆன்லைன், தவறிய அழைப்பு, உமங் செயலி என பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...