Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ITK - Reading Marathon வாசித்தல் பயிற்சியினை சிறப்பாக செயல்படுத்த சில ஆலோசனைகள்!

🔴 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் இன்று முதல் ஜூன் 12 வரை Reading Marathon  ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

🟢அதற்காக நீங்கள் Read Along செயலியை டவுன்லோட் செய்து உங்களது ஒன்றியத்தினை பதிவு செய்து( *ஒருமுறை block code கொடுத்து பதிவு செய்து விட்டால் அதை எக்காரணம் கொண்டும் ரீடிங் மாரத்தான் முடியும் வரை delete செய்து விடக்கூடாது* ), மாணவர்களைக் கொண்டு வாசிக்கும் பயிற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்.

🔴ஒருவேளை மாணவர்கள் விடுமுறையில் வெளியூர்களுக்குச் சென்றிருந்தால் தற்போது மையங்களுக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு மட்டும் வாசிப்புப் பயிற்சி அளிக்கவும். மேலும் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசி மையங்களுக்கு வருவதற்கு அறிவுறுத்தவும்..

🟢இல்லம் தேடி கல்வி மொபைல் app-ல் தேதி வாரியாக தமிழ் மற்றும் ஆங்கிலக் கதைகள் வாசித்தலுக்கு புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

🔴மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள புத்தகங்களைப் படித்து முடித்த பிறகு கூடுதலாக நமது Read Along  செயலியில் உள்ள புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் வாசிக்கலாம்.

🟢 அந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை அதை முடித்த பிறகு கூடுதலாக எவ்வளவு புத்தகங்கள் வேண்டுமானாலும் வாசிக்கலாம்.

🔴 மாணவர்கள் வாசிக்கும்போது கூடுமானவரையில் சரியான உச்சரிப்பினை தெளிவாக உச்சரிக்க செய்து அதன்படி வாசிக்க பழக்குங்கள் அப்பொழுதுதான் மாணவர்கள் நிறைய ஸ்டார்களை போனசாக பெற இயலும். அதேபோன்று எவ்வளவு விரைவாக வாசிக்கிறார்கள் அதன் வேகத்தைப் பொருத்து ஸ்டார்கள் கூடுதலாக கிடைக்கும்.

🟢ஒரு புத்தகத்தை ஓபன் செய்தால் அதனை முழுமையாக வாசித்து முடிக்கவும்.

🔴குழந்தைகள் ஆங்கிலக் கதைகள் வாசித்தலில் சிரமப்பட்டால் அவர்களுக்கு பிடித்த தமிழ்க் கதைகளையே நிறைய வாசிக்க சொல்லுங்கள் அவர்கள் விருப்பப் பட்டால் ஆங்கில கதைகளையும் வாசிக்கட்டும்.

🟢மாணவர்கள் விரும்பினால் அவர்கள் வீடுகளிலும் வாசிப்பதற்கு ஏதுவாக அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் Read Along செயலியை இன்ஸ்டால் செய்து Block code பதிவு செய்து அதை எவ்வாறு கையாள்வது என்பது  குறித்து மாணவர்களுக்கு  தன்னார்வலர்கள் வழிகாட்டலாம்..





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive