தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இருந்து மாறி, சி.பி.எஸ்.இ., இணைப்பில் சேருவதற்கான தடையில்லா சான்றிதழ் கேட்டு, நுாற்றுக்கணக்கான பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன.
இதனால், அமைச்சர் அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வி கமிஷனரகத்தில் கோப்புகள் தேங்கியுள்ளன.அதிகாரிகளுக்கு அச்சம்தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்றிதழ் வழங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சி.பி.எஸ்.இ.,க்கு அதிக பள்ளிகள் மாறினால், தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின் மவுசு குறைந்து விடும்; மாநில பாடத்திட்ட மாணவர்கள், தமிழக அரசு துறை பணிகளில் சேருவதில் பின்தங்கும் நிலை ஏற்படும் என, பள்ளிக் கல்வி அதிகாரிகளுக்கு அச்சம் ஏற்பட்டது. அதனால், சி.பி.எஸ்.இ.,க்கு மாறும்பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதில், மிகவும் நெருக்கடியான நடைமுறைகள் அமலாகின.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகள்பெருமளவு தளர்த்தப் பட்டுள்ளன. அதேநேரம், புதிதாக சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற்ற பள்ளியை துவங்க வேண்டும் என்றால், தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சர் மற்றும் கமிஷனரிடம், தேவையான, 'கோப்பு'களுடன் அளிக்க வேண்டும் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள் வழங்கல்இதன்படி, கடந்த ஓராண்டில், 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.தற்போதைய நிலையில், தமிழகத்தில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த நிலைமை நீடித்தால், தி.மு.க., ஆட்சியின் ஐந்தாண்டுகளில், 5,000க்கும் மேலான பள்ளிகள், மாநில பாடத் திட்டத்தில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...