பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை மற்றும் மின்சாரத் துறை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த சில நாள்களாக துறைவாரியாக முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வினை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தி ஆலோசனை வழங்கி வருகிறார்
கடந்த செவ்வாய்க்கிழமை மக்களுடன் மிக நெருங்கிய தொடா்புள்ள துறையாக உள்ள வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்த ஆய்வினை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நடத்தினாா். அப்போது வட்டாட்சியா் அலுவலக அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் அளவில் உள்ள சேவைகளில் எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். வருவாய்த் துறையின் மூலமாக 25-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றில் நடைமுறைச் சிக்கல்கள் ஏதும் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும், ஆன்லைன் பட்டா பரிமாற்ற பணிகள் தாமதம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினார்.
இதேபோன்று, புதன்கிழமை மாநில கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடா்பான ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை மற்றும் மின்சாரத் துறை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
துறைவாரியான முதல்வரின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10.20 மணிக்கு நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...