விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ், தமிழக அரசு அரசாணை வெளியீடு.
அரசு
ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,
விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய வெயிட்டேஜிக்கான அரசாணையை
தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களின்
ஓய்வு பெறும் வயது 58-ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54-வயது மற்றும்
அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு
கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன்
அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது
ஓய்வு பெறும் வயது 60-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 55-வயது
மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால், அதே போல ஓய்வு
பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ்
கொடுக்கப்பட்டு 60-ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம்
கணக்கிடப்படும்.
ஐம்பத்தி ஏழு வயதாகி ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும்.
ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60-வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.
விருப்ப
ஓய்வு பெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வு
ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், இதுபோன்ற புதிய வெயிட்டேஜிக்கான அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
2004-க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...