தமிழகத்தில்
உள்ள தனியார் பள்ளிகளில் பல மணி நேரம் காத்திருந்து தங்களுடைய
பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி. வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பெற
இரவு பகலாக காத்திருந்த நிலை தற்போது மாறி அரசுப் பள்ளிகளிலும் இப்படி
காத்திருந்து விண்ணப்பங்களை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு சான்றாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்காக பெற்றோர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளியின் தரம் எந்த அளவிற்கு உயர்ந்து உள்ளது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக மாறியுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் பள்ளியில் நல்ல ஒழுக்கங்களும், நல்ல கல்வியும், பயிற்சியும் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக அளவு கண்டிப்பும் கண்காணிப்பும் இருப்பதால் இந்த அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தாங்கள் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...