முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணிகளில், மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர்களாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், வரும், 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அவர்களை பள்ளி பணிக்கு அனுப்ப கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணியில் நியமிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு, அந்த பணியில் இருந்து விலக்கு அளித்து, பள்ளி பணிக்கு அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மதிப்பெண் சரிபார்ப்புக்கு அந்தந்த பாடம் சார்ந்த, மூத்த முதுநிலை ஆசிரியர்களை பணியில் நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...