Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்!

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: குடிமை

குறள் : 952

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.

பொருள்:
ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்

பழமொழி :

Pluck not where you never planted
பிறர் உடைமைக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெற்றோர் ஆசிரியர்கள் நான் நலம் பெறவே ஆலோசனை கூறுவர். கண்டிப்பாக அந்த அறிவுரைகள் படி நடக்க முயற்சி செய்வேன். 

2. நல்ல பண்புகள் கடை பிடித்து நல்ல செயல்கள் நாள் தோறும் செய்வேன்

பொன்மொழி :

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும் தொடர்ந்த உழைப்புமே ஆகும். வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.

பொது அறிவு :


1. மனித உடலில் மிகவும் கெட்டியான தோல் எங்குள்ளது?

 கால் பாதத்தில் உள்ளது.

 2.மனிதனின் முதுகுத்தண்டில் எத்தனை எலும்புகள் உள்ளன?

33 எலும்புகள்.

English words & meanings :

Gabble - talk rapidly and unintelligibly. Verb. அர்த்தமற்ற பேச்சு. வினைச்சொல்

ஆரோக்ய வாழ்வு :

வாழைப்பூவை வேகவைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணக் கோளாறுகள் சரியாகும்.


NMMS Q - 7

BDF, CFI, DHL, ? 

 Answer: EJO

ஜூன் 21

உலக இசை நாள் ( World music day) 



உலக இசை நாள் (World Music Day,[1] Fête de la Musique, Music Day,[2] Make Music Day[3][4] என்பது ஆண்டுதோறும் சூன் 21 அன்று நிகழ்த்தப்படும் இசைக் கொண்டாட்டங்கள் ஆகும். இந்நாளில் ஒரு நகரம் அல்லது நாட்டின் குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் அல்லது பொது இடங்கள் அல்லது பூங்காக்களில் இசைக்கருவிகளை வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு இசைக்கலைஞர்கள் வேடிக்கையாக கட்டணம் இன்றி பாடி அல்லது இசைக்கருவிகளை இசைத்து மகிழ்கிறார்கள்.

நீதிக்கதை

மாறுதல் முக்கியம்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். 

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார் ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்து கேட்டார். தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?

பையன் சொன்னான் தங்கம்

அவர் கேட்டார் பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?

பையன் சொன்னான் தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள். 

நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் . உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். உடனே அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

இன்றைய செய்திகள்

21.06.22

★12-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

★10-ம் வகுப்பு தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது.

★ தமிழகத்தில், பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைனில்  தொடங்கியது.

★எஸ்.ஐ. பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது.


★அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ரயில்கள்  நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

★போலி சீன நிறுவனங்களுக்கு உதவியதாக 400 கணக்கர்கள், செயலர்கள் மீது நடவடிக்கை.

★பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பதவி ஏற்றுக் கொண்டார்.

★உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 100 மீட்டர் ஓட்ட பந்தய போட்டியில் தமிழகத்தின்  கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை.

★23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஹாக்கி: தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபாரம்.

★ஹாலே ஓபன் டென்னிஸ் : டேனியல் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஹர்காக்ஸ்.

★நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பீட்டர் சீலர் ஓய்வு .

Today's Headlines

★ Perambalur district has secured the highest pass percentage in the Class 12 examination.  Vellore district ranks last.

 ★ Kanyakumari district has secured the highest pass percentage in the Class 10 examination.  Vellore district ranks last.

 ★ In Tamil Nadu, application registration for BE and B.Tech courses has started online.

 ★  Written test for SI posting  is scheduled to take place on  25th.  Arrangements for this have been made by the Tamil Nadu Uniformed Personnel Selection Board.

 ★ Some states have been affected due to the nationwide Bhanth against Agnipathai project.  About 500 trains have been stopped.  Police have been mobilized to control the violence.

 ★ Action has been taken on 400 accountants and secretaries who helped fake Chinese companies.

 ★ Sarah Tudret, daughter of Rodrigo Tudret, has been sworn in as Vice President of the Philippines.
 ★ College student of kn Peter Seeler retires.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive