பெரும்பாலான பள்ளிகளில், மே, 20 வரை, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். அவர்களுக்கு, மே, 20 முதல் ஜூன், 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.இரண்டு வார விடுமுறையே முடிந்த நிலையில், விடுமுறை நாட்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளின் ஆசிரியர்கள், இன்று முதல் பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், 200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள எண்ணும், எழுத்தும் என்ற மாணவர்களுக்கான எழுத்தறிவித்தல் திட்டம், 13ம் தேதி முதல்வரால் துவங்கப்பட உள்ளது. அதற்கு முன், ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகளை நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.
இதனால், கோடை விடுமுறையை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில், இன்று முதல் பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
Well and good
ReplyDelete